தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதியை இன்று (நவம்பர் 4) அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
அந்த வகையில் தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 2026ம் ஆண்டு மார்ச் 2ம்தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடை பெற உள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு 2026ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி நிறைவடைய உள்ளது.
