சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியை ராஜினாமா செய்ய திமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மதுரை மாநகராட்சியில் சொத்து வரி மதிப்பீட்டில் ரூ150 கோடி முறைகேடு நடந்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தற்போது வரை மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் நேற்று சென்னையில் தலைமறைவாக இருந்த போது அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மதுரை மேயர் இந்திராணி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே இந்த விவகாரத்தில் திமுகவின் மண்டல குழு தலைவர்கள் அனைவரையும் ராஜினாமா செய்ய உத்தரவிட்டது திமுக தலைமை. அப்போதே மேயர் இந்திராணியும் ராஜினாமா செய்யக் கூடும் என செய்திகள் வெளியாகி இருந்தது.
தற்போது கணவர் பொன் வசந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக தலைமை உத்தரவுப்படி, இந்திராணி தமது மேயர் பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.