சர்வதேச திரைப்படத் துறையின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று இரவு (இந்திய நேரப்படி நாளை அதிகாலை) ஹாலிவுட்டில் உள்ள டால்பி அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. ‘குவாண்டிகோ’ என்ற தொலைக்காட்சித் தொடர்மூலம் அமெரிக்க ரசிகர்களின் மனம் கவர்ந்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா விருது ஒன்றை வழங்கவிருக்கிறார்.
இந்நிலையில் இந்தத் தொடரின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பில் இருந்த பிரியங்கா சோப்ரா, ஆஸ்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டொரன்ட்டோ நகரிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு நேற்று விமானம் மூலம் கிளம்பிச் சென்றுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தோடு இந்தச் செய்தியை அவர் பதிவிட்டுள்ளார்.