பிரதமர் நரேந்திர மோடி வரும் 19-ந் தேதி தமிழ்நாட்டுக்கு வருகை தருகிறார். கோவையில் நடைபெறும் இயற்கை வேளாண் கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
கோவையில் வரும் 19-ந் தேதி கொடிசியா அரங்கில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இதனையடுத்து கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மத்திய வேளாண் அமைச்சகத்தின் இயற்கை வேளாண்மை இணைச் செயலாளர் ஃபிராங்கிளின் கோபுங் நேற்று கோவை கொடிசியா அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறும் மாநிலங்களில் பிரதமர் மோடி தொடர் பயணங்கள் மேற்கொள்வது அவரது வியூகம் என்பது குறிப்பிடத்தக்கது.
