குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வதால் அக்டோபர் 21,22 ஆகிய நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இம்மாத இறுதியில் கேரளா பயணம் மேற்கொள்கிறார். கேரளா தலைநகர் திருவனந்தபுரத்துக்கு அக்டோபர் 21-ந் தேதி செல்லும் திரவுபதி முர்மு மறுநாள் 22-ந் தேதி பம்பை அருகே உள்ள நிலக்கல்லுக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார்.
நிலக்கல்லில் இருந்து கார் மூலம் பம்பைக்கு வரும் திரவுபதி முர்மு, இருமுடி கட்டி தேவஸ்தானத்தின் சிறப்பு வாகனம் மூலம் சபரிமலை சென்று தரிசனம் செய்கிறார்.
திரவுபதி முர்முவின் சபரிமலை வருகையால் அக்டோபர் 21,22 ஆகிய நாட்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் முன்பதிவும் ரத்து செய்யப்படுகிறது.
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, அக்டோபர் 17-ந் தேதி திறக்கப்படுகிறது.