விஜயை ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு அழைத்து, உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் கேட்க வேண்டும். அதைத் தெரிந்துகொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற நிகழ்ச்சி மற்றும் பூத் முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வந்திருந்தார்.அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, பிரதமர் மோடி கூட்டணிக் கட்சிகள் நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார். அதில் அவர்கள் கூட்டணியில் உள்ள அனைவரும் கலந்திருக்கிறார்கள். அதில் எனக்கு கருத்து சொல்ல ஒன்றும் இல்லை. இது கேப்டன் கட்சி; இங்கு யாரையும் மிரட்டி அடிபணிய வைக்க முடியாது என்று கூறினார்.
எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொண்டிருந்தது போக, ஒன்றாக இணைந்திருப்பது குறித்த கேள்விக்கு, “இதை எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் இடம்தான் கேட்க வேண்டும். என்னிடம் கேட்டால் அது சரியாக இருக்காது” என்றார்.
விஜய் குறித்த கேள்விக்கு, “ஜனநாயகன் படத்தில் உண்மையிலேயே ஏதாவது இருக்கிறதா என்பதை விஜய்தான் கூற வேண்டும். சட்டம் தன் கடமையைச் செய்யும். அதற்கு உரிய பதில் சொல்ல வேண்டியவர் விஜய். சட்டம் தன் கடமையைச் செய்யும். விஜயை ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு அழைத்து எல்லா சந்தேகங்களையும் கேட்க வேண்டும். அதைத் தெரிந்துகொள்ள நானும் ஆர்வமாக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
