பிரேடேட்டர் படங்களின் வரிசையில் பத்தாவதாக வரும் அமெரிக்க சயின்ஸ் ஃபிக்க்ஷன் திரில்லர் படம் பிரிடேட்டர்: பேட் லேண்ட்ஸ்’.
2022 ஆம் ஆண்டு வெளியான ‘ப்ரே’ (Prey) திரைப்படத்தின் மூலம் இந்த பிரிடேட்டர் படத் தொடருக்குப் புத்துயிர் அளித்த டான் டிராக்டன்பெர்க், இந்த படத்தின் மூலம் பிரிடேட்டர் பிரபஞ்சத்தின் புதிய சினிமாவை வழங்கி இருக்கிறார் என்கிறார்கள்.
விமர்சகர்கள் இந்த படத்தை, “பிரிடேட்டர் பற்றிய நம்பிக்கைகளை சிறந்த முறையில், விரிவாக எடுத்துரைக்கும் பொழுதுபோக்கு அறிவியல் புனைகதை சாகசம்” என்று பாராட்டுகின்றனர்.

அண்மையில் இங்கிலாந்தில் முதன் முதலாக திரையிடப்பட்டபோது படத்தை பார்த்த பார்வையாளர்களும் விமர்சகர்களும் படத்தைக் கொண்டாடிக் களித்தார்கள்.
படத்தில் எமோஷன், நகைச்சுவை மற்றும் அதிரடி ஆக்ஷன் நிறைந்துள்ளது என்ற பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
”புகழ்பெற்ற வேற்றுகிரக வேட்டைக்காரர்களான Yautja- வின் கதையை விறுவிறுப்பாக சொல்லியதன் மூலம் பேட்லேண்ட்ஸ் பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வருகிறது.
நடிகர்கள் டிமிட்ரியஸ், சுஸ்டெர்- கோலோமடாங்கி மற்றும் எல்லி ஆகியோருக்கு இடையிலான கெமிஸ்ட்ரியும் நகைச்சுவையும் உணர்வுப்பூர்வமான தருணங்களும் அருமை ” என்கிறார்கள்.

பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ இந்திய திரையரங்குகளில் நவம்பர் 7, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
– ராஜ திருமகன்.
