ADVERTISEMENT

சாம்பியன் ஆனார் பிரக்ஞானந்தா… உலக செஸ் வரலாற்றில் புதிய சாதனை!

Published On:

| By christopher

Praggnanandhaa won Nodirbek Abdusattorov At UzChess Cup

உஸ்செஸ் கோப்பை மாஸ்டர்ஸ் தொடரின் இறுதிச் சுற்றில் வென்ற கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலக செஸ் தரவரிசையில் 4 வது இடத்திற்கு முன்னேறினார். இதன்மூலம் வரலாற்றில் முதன்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் டாப் 5 இடத்திற்குள் நுழைந்துள்ளனர். Praggnanandhaa won Nodirbek Abdusattorov At UzChess Cup

உஸ்செஸ் கோப்பை மாஸ்டர்ஸ் தொடரின் இறுதிச் சுற்று இன்று (ஜூன் 27) நடைபெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த 19 வயதான கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசட்டோரோவை எதிர்கொண்டார்.

ADVERTISEMENT

பரபரப்பான இந்த ஆட்டத்தில் கருப்பு காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா, அப்துவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் பரிசுத் தொகையாக 20 ஆயிரம் அமெரிக்கா டாலரையும் வென்றார்.

இதன்மூலம் 2778.3 புள்ளிகளுடன் உலக செஸ் நேரடி தரவரிசையில் 4வது இடத்திற்கு உயர்ந்தார். மேலும் இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் என்ற வரலாற்று மைல்கல்லையும் அவர் எட்டியுள்ளார்.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீயில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் போட்டியின் போது பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான டிங் லிரெனை தோற்கடித்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.

அப்போது 11 இடத்தை பிடித்திருந்த அவர், அடுத்தடுத்து முன்னேறி தற்போது டாப் 5 இடத்திற்குள் நுழைந்துள்ளார்.

ADVERTISEMENT

ஏற்கெனவே இந்தியாவைச் சேர்ந்த உலக சாம்பியன் டி குகேஷ் தரவரிசையில் 5வது இடத்தில் உள்ளார். தற்போது பிரக்ஞானந்தா 4வது இடத்திற்கு முன்னேறியதன் மூலம் முதன்முறையாக டாப் 5 இடத்திற்குள் இரண்டு இந்தியர்கள் இடம்பிடித்து புதிய சாதனை படைத்துள்ளனர். இருவருமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் பெருமையை பெற்றுத் தந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share