லாஸ் வேகாஸில் நடந்த ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியில், இந்தியாவின் பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார். Praggnanandhaa won Magnus Carlsen in LasVegas FCGS
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டி நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற 4வது குழு சுற்றில் 19 வயதான இந்தியாவின் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார்.
வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தாவின் 39வது நகர்வில் தோல்வியைப் ஒப்புக்கொண்டு வெளியேறினார் கார்ல்சன். இந்த ப்ரீஸ்டைல் போட்டியில் கார்ல்சனின் 84.9% உடன் ஒப்பிடும்போது பிரக்ஞானந்தா வியக்கத்தக்க வகையில் 93.9% துல்லிய நகர்த்தலில் வெற்றிவாகை சூடியுள்ளார்.
இந்த வெற்றியின்மூலம் பிரக்ஞானந்தா தனது குழுவில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். இதனையடுத்து அவருக்கு இந்திய அரசு, உலக சதுரங்க கூட்டமைப்புகள் மற்றும் அவரது ரசிகர்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பிரக்ஞானந்தாவின் இந்த வெற்றிக் குறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா கூறுகையில், “இந்திய சதுரங்கத்திற்கு இன்னொரு பெருமையான தருணம்!
19 வயதில், கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா, லாஸ் வேகாஸில் நடந்த ஃப்ரீஸ்டைல் சதுரங்க கிராண்ட்ஸ்லாம் போட்டியில், உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை 39வது நகர்த்தலில் வீழ்த்தி மீண்டும் தனது திறமையைக் காட்டியுள்ளார். உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள் பிரக்ஞானந்தா” என வாழ்த்தியுள்ளார்.