கோவை மக்களே.. நாளை (ஆக.14) உங்கள் பகுதியில் மின்தடையா?

Published On:

| By easwari minnambalam

Places where power outages will occur in Coimbatore tomorrow

கோவையில் சில பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 14) பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.ஜி.எஸ்டேட், பி.எஸ்.ஜி., மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே – அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடு புதுார், எல்லை தோட்டம், வ.உ.சி., காலனி, பி.கே.டி.நகர், அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதி புரம், பங்கஜா மில், தாமு நகர், பாலசுப்ரமணியா நகர், பாலகுரு கார்டன், சவுரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், பார்சன் அபார்ட்மென்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி ரோடு ஒருபகுதி, நஞ்சுண்டாபுரம் ரோடு மற்றும் திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் துண்டிக்கப்படும்

ADVERTISEMENT

இதனால் பொதுமக்கள் தேவையான முன் ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share