யூ டியூப் மூலம் அறிமுகமாகி அப்புறம் தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் தெரிய வந்தவர் பூர்ணிமா ரவி.
பிக் பாஸில் கலந்து கொண்டு “ர்ர்ர்ரொம்ப நல்ல்ல்ல்ல” பெயரோடு வெளியே வந்தார்.
ஆனாலும் விவரம். அதற்கு அவர் நடித்த ஒரு படத்தின் பெயரே சாட்சி. படத்தின் பெயர் ‘பிளான் பண்ணிப் பண்ணணும்’ அதேகேற்ப பிக் பாஸில் இருந்து வந்த பிறகு பிக்பாஸ் மூடிலேயே இல்லாமல் அமைதியானார்.
நயன்தாரா நடித்த அன்னபூரணி படத்தில் ஒரு கதாபாத்திரம்.
வெளியாவது சிரமம் என்ற நிலையில் இருந்த ட்ராமா என்ற படம் இவர் பிக் பாசுக்குப் போய் வந்த காரணத்தால் தியேட்டருக்கு வந்தது (வந்த வேகத்தில் போனது என்பது வேறு விஷயம்).
இப்போது பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, உருவாகியிருக்கும் எல்லோ (yellow ) என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். ஹாட் ஸ்டாரில் ஒரு வெப் சீரிஸிற்காக, பூர்ணிமாவை பார்க்கப் போன படக்குழு அப்புறம் படமாகவே எடுத்து இருக்கிறது.
இயக்குநர் பிரபு சாலமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நவம்பர் 21 ஆம் தேதி படம் திரைக்கு வரவுள்ளது. ” பூர்ணிமா தான் இந்தப் படத்தின் மையமாக இருந்தார். அனைவரையும் ஒருங்கிணைத்தது அவர்தான்” என்கிறது படக் குழு. படத்தில் வைபவ் நடிக்க காரணமும் பூர்ணிமா ரவி தான்.
படம் பற்றி பேசும் பூர்ணிமா ” ஒரு படத்தின் வெற்றியாக நினைப்பது அடுத்தடுத்த வாய்ப்புகள், எக்ஸ்பீரியன்ஸ் பணம். ஆனால் இந்தப் படத்தில் எங்கள் எல்லோருக்கும் பல பாடங்கள் கிடைத்தது. நிறையக் கற்றுக் கொண்டோம். பலருக்கும் பெரிய படத்தில் வேலை பார்க்க ஆசை இருக்கும், நாங்கள் எங்களுக்கான வாய்ப்பை உருவாக்கி உழைத்துள்ளோம்..
இப்படத்தில் எல்லோருமே சின்ன ஸ்கிரீனுக்கு உழைத்து, இப்போது பெரிய திரைக்கு வந்துள்ளோம். எங்கள் டீமை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது. பல தடைகள் இருந்தாலும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளோம். “என்றார்.
அதாவது வாய்ப்புக்கு கிடைக்காவிட்டால் வாய்ப்புகளை உருவாக்குங்கள் என்கிறார் பூர்ணிமா.
- ராஜ திருமகன்
