ADVERTISEMENT

பூஜா ஹெக்டே நடிக்கும் தெலுங்கு படம் – அறிவிப்பு வெளியானது!

Published On:

| By uthay Padagalingam

’கூலி’ படத்தில் வந்த ‘மோனிகா’ பாடல் வழியே மீண்டும் ரசிகர்களிடையே பேச்சுபொருளாகி இருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே. இவர் நடித்த முதல் படமான ‘முகமூடி’யை அதே ரசிகர்கள், ‘இவரா இப்படியிருந்தார்’ என்று கேட்பது நிச்சயம். தற்போது விஜய்யுடன் ‘ஜனநாயகன்’, ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா 4’ மற்றும் இந்தியில் வருண் தவான், மிருணாள் தாகூர் உடன் ‘ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை’ படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கைப் பொறுத்தவரை சிரஞ்சீவி, ராம்சரண் உடன் ‘ஆச்சார்யா’வுக்குப் பிறகு வேறு எந்தப் படத்திலும் பூஜா நடிக்கவில்லை. அந்த படத்தின் பெருந்தோல்வியும் அதற்குக் காரணமாக இருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், துல்கர் சல்மானின் 41வது படத்தில் நடிக்கவிருக்கிறார் பூஜா. தெலுங்கில் தயாராகும் இப்படத்தைப் புதுமுகமான ரவி நெலகுடிதி இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இதற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தில் பூஜா நடிப்பது குறித்த முறையான அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. அவரை வரவேற்கும்விதமாக வீடியோ வெளியிட்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனமான எஸ்.எல்.வி. சினிமாஸ். அதில், அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வருவது, துல்கர் உடன் பேசுவது, கேமிரா முன் நிற்பது என்றிருக்கிற அந்த வீடியோ, இறுதியாக அவர் நடித்த காட்சியுடன் நிறைவடைகிறது.

ADVERTISEMENT

அதனைப் பார்க்கிற ரசிகர்கள், ‘முகமூடி படத்துல பார்த்த மாதிரி இருக்குதே’ என்று ‘கமெண்ட்’களில் புகழ்ந்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share