மணமகன் போல் நடித்து பல பெண்களை ஏமாற்றிய மேற்குவங்கத்தைச் சேர்ந்த பிரகாஷ் நாயக்கை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி தனியார் நிறுவனத்தின் மேலாளர், சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், தனது அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரது மகளின் புகைப்படங்களை யாரோ ஒருவர் வாட்ஸப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலமாக அலுவலகத்தில் பணிபுரியும் மற்ற ஊழியர்களுக்கு அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். pondy police arrest serial sex offender
இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், பெண்ணின் புகைப்படங்களை அனுப்பியது மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரகாஷ் நாயக் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
சைபர் கிரைம் போலீசார் இவரை தேடியபோது, ஒடிசாவில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஒடிசா விரைந்த போலீசார் பாலசூரில் வைத்து பிரகாஷை கைது செய்தனர். அவரது மொபைல் போனை சோதனை செய்ததில் பல்வேறு பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்துள்ளது.
காவல்துறையினர் பிரகாஷிடம் நடத்திய விசாரணையில், மணமகன் போல் நடித்து பல பெண்களை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், பெண்களுடன் நெருக்கமாக இருக்கும்போது ரகசியமாக வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து அவர்களை பிளாக்மெயில் செய்துள்ளார்.
கைது செய்யப்பட்ட பிரகாஷை மாஜிஸ்திரேட்டு முன்பாக ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். pondy police arrest serial sex offender