கரூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் நெரிசல் சம்பவம் பல உயிரிழப்புகளுக்கும் காயங்களுக்கு காரணமாகியுள்ளது. தொடக்க விசாரணையில் சில முக்கிய அம்சங்கள் வெளிவந்துள்ளன.
தாமதம் மற்றும் கூட்ட நெரிசலுக்கான காரணங்கள்
தவெக தலைவர் விஜய் மதியம் 12.45க்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் 5 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக வந்தார். மேலும் வந்த பிறகும் உரையை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
திருக்கம்புளியூர் சந்திப்பை கடந்தபின், விஜய் தனது வாகனத்துக்குள் ஒளியை அணைத்து, மக்கள் கவனிக்காமல் சுமார் ஒரு மணி நேரம் இருந்தார்.
பொதுமக்கள் அவர் நிகழ்ச்சி இடத்துக்கு நேரடியாக சென்றுவிட்டார் என்று நினைத்து கூட்டமாக நகரத் தொடங்கினர். இதுவும் கூட்ட நெரிசல் அதிகரிக்கக் காரணமானது.
விதிமுறைகள் மீறல்
முதலில் கோரப்பட்ட இடம் (லைட் ஹவுஸ் ரவுண்ட்டானா, உழவர் சந்தை மைதானம்) நெரிசல் அதிகமுள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் அழுத்தம் மூலம் வேலுசாமிபுரம் இடத்துக்கு அனுமதி பெறப்பட்டது.
விண்ணப்பத்தில் 10,000 பேர் வருவார்கள் என கூறப்பட்டிருந்தாலும், நிகழ்ச்சிக்கு 25,000–27,000 பேர் திரண்டனர்.
பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை. தடுப்பு கம்பிகள், அவசர வெளியேறும் பாதைகள் ஏற்பாடு செய்யப்படவில்லை.
குழந்தைகள், மூத்தவர்கள், பெண்களுக்கு தனி வசதி செய்யப்படவில்லை.
குடிநீர், முதலுதவி, மருத்துவ குழு ஆகியவை ஏற்பாடு செய்யப்படவில்லை. வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்ததால் உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்தன.
அனுமதி இன்றி கட்சி கொடிகள், பேனர்கள், பிளக்ஸ்கள் நகரம் முழுவதும் பொருத்தப்பட்டன.
விஜய் வாகனத்தைச் சூழ்ந்து வந்த ரசிகர்கள் சாலைகளில் போக்குவரத்து தடையை ஏற்படுத்தினர்.
சிலர் மரத்தில் ஏறி பார்வையிட்டபோது கிளைகள் உடைந்து விழுந்ததில் கூட்ட நெரிசல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதற்கு முன் திருச்சி, அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், நாமக்கல் பகுதிகளில் ஏற்பட்ட நெரிசல் சம்பவங்களில் இருந்து பாடம் பெறப்படவில்லை.
வழக்கு விபரங்கள்
தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன், தவெக நிர்வாகிகள் புச்சி ஆனந்த், CT நிர்மல் குமார் ஆகியோருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
BNS பிரிவு 105 – கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை.
BNS பிரிவு 110 – குற்றமற்ற கொலை செய்ய முயற்சி.
BNS பிரிவு 125 – மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர/அலட்சிய செயல்களுக்கு தண்டனை
BNS பிரிவு 223 – பொது அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்ப்படையாமை குற்றமாக்கப்படுகிறது.
TNPPDL சட்டம் பிரிவு 3 – பொது சொத்துக்களை சேதப்படுத்தல்
இந்த மேலும் இந்த சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
காவல்துறை அறிக்கை முழுமையாக…