சம்மன் கிழிப்பு… போலீசார் மீது தாக்குதல்… சீமான் வீட்டில் நடந்த களேபரம்!

Published On:

| By christopher

police attacked by seeman security

நடிகை விஜயலட்சுமி வழக்கில் நாளை கண்டிப்பாக சீமான் ஆஜராக வேண்டும் என ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்ட பாதுகாவலர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். police attacked by seeman security

நடிகை விஜயலட்சுமி அளித்த வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு வளசரவாக்கம் போலீஸார் சீமானுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.

ஆனால் சீமான் சார்பாக அவரது வழக்கறிஞர்கள் இன்று வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராகினர். அவர்கள், “கிருஷ்ணகிரியில் ஏற்கெனவே திட்டமிருந்த கட்சி கலந்தாய்வு கூட்டத்தில் சீமான் பங்கேற்றுள்ளதால் இன்று அவரால் நேரில் ஆஜராக முடியவில்லை. அவர் ஆஜராக 4 வார கால அவகாசம் அளிக்க வேண்டும்” எனக் கேட்டனர்.

அதற்கு மறுப்பு தெரிவித்த போலீசார், சீமான் நாளை காலை 11 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும், தவறினால் கைது செய்யப்பட நேரிடும் எனவும் குறிப்பிட்டு அதற்கான சம்மனை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டின் வாசலில் போலீசார் ஒட்டினர்.

போலீசாருடன் மோதல்! police attacked by seeman security

ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே அங்கிருந்த நாதக நிர்வாகி சுபாகர் என்பவர், சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை போலீசார் கண்முன்னே கிழித்தெறிந்தார். இதுதொடர்பாக உயரதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டு, வீட்டுக்குள் நுழைய முயன்று விசாரிக்க சென்ற போலீசாரிடம் சீமான் வீட்டு பாதுகாவலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து அவர் சம்மன் ஒட்ட வந்த இன்ஸ்பெக்டர் மீது தாக்குதலில் ஈடுபடவே, அவரை குண்டுக்கட்டாக போலீஸ் வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர்.

இந்த சம்பவத்தின் போது அந்த பாதுகாவலர் தனது கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து மிரட்டினார். எனினும் அதனை பத்திரமாக கைப்பற்றிய போலீசார், அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துசென்றுள்ளனர். அவருடன் சம்மனை கிழித்த நாதக நிர்வாகி சுபாகரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே தான் சொல்லி தான் சம்மன் கிழிக்கப்பட்டது எனவும், நடந்த சம்பவத்திற்குமன்னிப்பு கேட்பதாகவும் சீமானின் மனைவி கயல்விழி கூறியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share