கோவையில் பிளேடை காட்டி தற்கொலை செய்து கொள்வேன் என போலீசாரை மிரட்டிய போக்சோ குற்றவாளி கைது செய்யப்பட்டார். pocso accused arrested who threaten with blade
கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் ரிஸ்வான். இவர் மீது கடந்த 2021ம் ஆண்டு மகளில் காவல் நிலையத்தில் கோக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு செய்யப்பட்டது. இந்த வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் கடந்த வாரம் இறுதி கட்ட விசாரணை நடந்தது. அப்போது நீதிமன்றம் வந்த ரிஸ்வான் விசாரணைக்கு பிறகு அங்கிருந்து தப்பி ஓடினார். இதையடுத்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய போலீசார் அவரை பிடிக்கச் சென்ற போது, பிளேடை வாயில் வைத்து மிரட்டினார். மேலும் ”என்னை பிடிக்க வந்தால் கழுத்தை அறுத்து கொள்வேன்” என கையில் பிளேடை காட்டியும் போலீசாரை மிரட்டினார். இதனால் போலீசார் தயங்கி நின்றனர். இப்படியே சுமார் 4 மணி நேரம் போலீசாரை தடுத்து வைத்தார். இதைத்தொடர்ந்து வேறு வழியின்றி போலீசார் கைது நடவடிக்கையை கைவிட்டு விலகினர். இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது.

போக்சோ வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் குற்றவாளி ரிஸ்வான் மறைந்திருந்த இடத்தை போலீசார் தேடி வந்தனர். ரிஸ்வான் பதுங்கி இருந்த இடம் குறித்து தகவல் கிடைத்த நிலையில், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பரிமளா, தலைமையில் உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் கொண்ட குழுவினர் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து ரிஸ்வான் பதுங்கி இருந்த இடத்தை தூரத்தில் இருந்து கண்காணித்தனர். 3 மணி நேரம் வரை மறைந்திருந்த போலீசார் எதிர்பாராத நேரத்தில் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 10 பிளேடையும் கைப்பற்றினர். இதையடுத்து ரிஸ்வான் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
