பாமகவுக்கு உரிமை கோரும் அன்புமணிக்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்க அக்கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணியில் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
பாமகவின் தலைவராக அன்புமணியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்டது; அன்புமணி அலுவலக முகவரிக்கே தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பிவிட்டது என்பது அவரது ஆதரவாளர்கள் கருத்து.
ஆனால் பீகார் தேர்தலிலும் போட்டியிடப் போவதாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் பொய்சொல்லி மாம்பழ சின்னத்தைப் பெற்றுள்ளார் அன்புமணி; பாமகவின் தலைமை அலுவலக முகவரியை மாற்றி கொடுத்துவிட்டார் என்பது ராமதாஸ் பாமகவின் குற்றச்சாட்டு.
இந்த பின்னணியில், பாமக கவுரவத் தலைவர் ஜிகே மணி டெல்லி சென்றுள்ளார். மேலும், இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை நேரில் சந்தித்து அன்புமணிக்கு எதிராக புகார் கொடுக்க இருக்கிறார் ஜிகே மணி; தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது பற்றி மூத்த வழக்கறிஞர்களுடனும் அவர் ஆலோசனை நடத்துகிறார் என்றும் பாமக வட்டாரங்கள் தெரிவித்தன.