திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மோடி.. நெடுஞ்சாண்கிடையாக விழுந்து சாமி தரிசனம்!

Published On:

| By Mathi

Modi Thiruparankundram

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மார்ச் 1-ந் தேதி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து சாமி தரிசனம் செய்தார்.

மதுரையில் இன்று ரூ4,000 கோடி திட்டங்களை அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனையடுத்து திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு பிரதமர் மோடி சென்றார்.

ADVERTISEMENT

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் சாமி தரிசனம் செய்த மோடிக்கு கோவில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இதனையடுத்து முருகன் கோவிலில் பிரதமர் மோடி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து சாமி தரிசனம் செய்தார்.

ADVERTISEMENT

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share