பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மிகப் பெரும் வெற்றியைப் பெற்றதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் ரூ4,900 கோடி திட்டங்களை இன்று ஜூலை 26-ந் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்து பிரதமர் மோடி பேசியதன் முக்கிய அம்சங்கள்:
- வெளிநாட்டில் இருந்து ஶ்ரீ ராமரின் மண்ணான தமிழ்நாட்டில் கால் பதித்துள்ளேன்.
- கார்கில் போர் வெற்றி தினமான இன்று கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன்.
- ஆழ்கடலில் சுதேசி கப்பலை செலுத்தி ஆங்கிலேயருக்கு சவால்விட்டவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை.
- இங்கிலாந்துடனான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இனி பிரிட்டனில் விற்பனையாகும் 99% இந்திய பொருட்களின் விலை குறையும்.
- உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்.
- ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது.
- ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையால் இந்தியாவின் பலத்தை உலகம் கண்கூடாக பார்த்தது.
- ஆபரேஷன் சிந்தூரில், Make In India-ன் கீழ் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு ஆயுதங்கள் மிக முக்கியமான பங்கு வகித்தது.
- மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள்தான் தீவிரவாதிகளின் முகாம்களை அழித்தன.
- தமிழ்நாட்டின் தூத்துக்குடி முத்துகளைத்தான் பில்கேட்ஸ்-க்கு நான் பரிசாக அளித்தேன்.
- தூத்துக்குடி விமான நிலையத்துக்கு இனி ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகள் வந்து செல்வர்.
- சக்தி வாய்ந்த இந்தியாவுக்கு தூத்துக்குடி மிகப் பெரிய பங்களிப்பை செய்து வருகிறது.
- தமிழ்நாட்டுக்கு ஏராளமான ரயில்வே திட்டங்களை மத்திய அரசு வழங்கி இருக்கிறது.
- 11 ஆண்டுகளில் தேசத்தின் ரயில்வே துறை நவீனமயமாக்கப்பட்டுள்ளது.
- ஜம்மு காஷ்மீரின் செனாப் ரயில் பாலம், பொறியியலின் அற்புதம்
- தமிழ்நாட்டின் 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
- ரயில்வே திட்டங்களால் தமிழ்நாட்டின் வளர்ச்சி மிகவும் அதிகமாகி வருகிறது.
- மின் உற்பத்தி அதிகரிப்பதால் தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி பெறும்.
- மேம்பட்ட தமிழ்நாடு- தமிழ்நாட்டின் வளர்ச்சி நமது கனவு. தமிழ்நாட்டின் வளர்ச்சியுடனான கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
- காங்கிரஸ் தலைமையிலான ஐமு கூட்டணி ஆட்சியை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டுக்கான நிதி ஒதுக்கீடு 3 மடங்கு அதிகம்.
- தமிழ்நாட்டுக்கு 11 ஆண்டுகளில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
- மீனவர்களுக்கு இதுவரை இல்லாத கரிசனத்தை மத்திய அரசு வெளிப்படுத்தியது.
மேலும் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்த திட்டங்களின் நன்மைகள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி விரிவாக விவரித்தார்.

ப்ளாஷ் லைட் அடிக்க சொன்ன மோடி
பிரதமர் மோடி தமது பேச்சின் முடிவில், கூட்டத்தினரைப் பார்த்து உங்கள் உற்சாகம் கரை புரண்டோடுகிறது.. உங்கள் செல்போனில் ப்ளாஷ் லைட்டை அடித்து அந்த உற்சாகத்தை வெளிப்படுத்துங்கள் என்றார்.. இதனையடுத்து பாஜகவினர் தங்களது செல்போனை உயர பிடித்து ப்ளாஷ் லைட் அடித்து ஆரவாரம் எழுப்பினர்.