அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் தரிசனம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு நடைபெற்ற இசைஞானி இளையராஜாவின் திருவாசனம் இசை நிகழ்ச்சியை கண்டு ரசித்தார்.
திருச்சியில் இருந்து இன்று ஜூலை 27-ந் தேதி முற்பகல் ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
ஹெலிபேடு தளம் அமைக்கப்பட்டுள்ள பொன்னேரியில் இருந்து கங்கை கொண்ட சோழபுரம் கோவில் வரை பொதுமக்களை ரோடு ஷோ நிகழ்ச்சியில் மோடி சந்தித்தார். சாலையின் இருபுறமும் பொதுமக்களும் அதிமுக மற்றும் பாஜகவினரும் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர். மோடியை வரவேற்க அதிமுக தொண்டர்கள் பல மணிநேரம் காத்திருந்தனர்.
கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில், வாரணாசி- காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட கங்கை நீரால் அபிஷேகம் செய்த மோடி, சில நிமிடங்கள் தியானம் மேற்கொண்டார். ராஜேந்திர சோழ மன்னனின் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி
மேலும் இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் ஆன்மீக இசை நிகழ்ச்சியையும் பிரதமர் மோடி கண்டு ரசித்தார்.
முன்னதாக திருச்சியில் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலில் இருந்து விமான நிலையம் செல்லும் வழியில் பொதுமக்களை சந்திக்கும் ரோடு ஷோ நிகழ்ச்சியை நடத்தினார் மோடி.