தமிழகத்தில் நாளை முதல் பிளஸ் டூ தேர்வுகள்

Published On:

| By Mathi

Plus 2 exam

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு (+2 பிளஸ் டூ) மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நாளை மார்ச் 2-ந் தேதி தொடங்குகின்றன சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பொதுத் தேர்வை எழுத உள்ளனர்.

பிளஸ் டூ பொதுத் தேர்வுகளுக்கான தேதி கடந்த ஆண்டு நவம்பர் 5-ந் தேதி தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் (TNDGE) வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வுகள் மார்ச் 2-ந் தேதி முதல் மார்ச் 26-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெற உள்ளன.

ADVERTISEMENT

பிளஸ் டூ மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி 9-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 14-ந் தேதி வரை நடத்தப்பட்டன. பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் தொழில் பாதையில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுவதால், கல்வித்துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share