9 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு : மோடி பேச்சு!

Published On:

| By Kavi

பிரதமர் மோடி இன்று (மார்ச் 11) மாலை திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு சார்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு பொருநை அருங்காட்சியக வடிவ கேடயத்தை நினைவுப் பரிசாக வழங்கினார். 

ADVERTISEMENT

தொடர்ந்து பிரதமர் மோடி ரூ.5,665 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ”தமிழ் மொழி, பண்பாடு மற்றும் திருவள்ளுவரை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

“இன்று தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தமிழக இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும். எரிவாயு விநியோகத் திட்டம் காற்று மாசைக் குறைக்கும். இதன் தாக்கம் 4 கோடி மரங்களை நடுவதற்குச் சமமானது.

பாரத் பெட்ரோலியம் திட்டம் மூலம் ரூ.3,700 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பு தமிழ்நாட்டின் நீலகிரி ,ஈரோடு மாவட்டங்களுக்கு பயனாக அமையும். அதோடு, சுமார் 9 லட்சம் குடும்பங்களுக்கும் நூற்றுக்கணக்கான வர்த்தக நிறுவனங்களுக்கும் குழாய் வழி இயற்கை எரிவாயு கொண்டு சேர்க்கும்” என்றார்.

ADVERTISEMENT
🔴LIVE: திருச்சியில் பிரதமர் மோடி நேரலை | Modi | Trichy | BJP | EPS
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share