வறட்டு இருமலுக்கு தீர்வு வேண்டுமா?.. தேன், மிளகு தரும் சூப்பர் நிவாரணம்!

Published On:

| By Santhosh Raj Saravanan

pepper and honey Home remedies to reduce dry cough

வறட்டு இருமலால் அவதிப்படுபவர்களுக்கு மிளகு, தேன் சூப்பர் நிவாரணமாக உள்ளது.

வானிலை சூழல்கள் மாறும்போது, அதிக குளிர் சமயங்களில் பலருக்கும் வறட்டு இருமல் ஏற்படுகிறது. வறட்டு இருமல் வழக்கமான இருமல் போல அல்லாமல் இரும்பும் போது தொண்டை வலியை ஏற்படுத்துகிறது.  வறட்டு இருமல் காரணமாக தொண்டை எரிச்சல், அடிக்கடி இருமல், இரவில் இருமல் ஆகியவை ஏற்படுகிறது.

ADVERTISEMENT

வறட்டு இருமலை குறைக்கும் வீட்டு வைத்தியம் (Home remedies to reduce dry cough): வறட்டு இருமலை தவிர்க்க நாம் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டியது இருக்கும். ஆனால், வீட்டு சமையல் அறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டே வறட்டு இருமலை சரிசெய்துவிடலாம் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. கருப்பு மிளகு, தேன் மூலம் வறட்டு இருமலை குணப்படுத்தும் வீட்டு வைத்தியத்தை தெரிந்துகொள்வோம்.

மிளகு, தேனின் மருத்துவப் பண்புகள் (Medicinal benefits of pepper and honey): கருப்பு மிளகு என்பது தொண்டை வலியை குணப்படுத்தவும், சளியை குறைக்கவும் உதவி புரிகிறது. மிளகின் பண்புகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தேன் தொண்டைப் பகுதியைச் சுற்றி ஒரு படலத்தை உருவாக்கி நிவாரணம் அளிக்கிறது. இது வறட்டு இருமலால் ஏற்படும் எரிச்சலை குறைப்பதற்கும், தொண்டையை ஈரப்பதமாக்குவதற்கும் தேன் பயன்படுகிறது.

ADVERTISEMENT

மிளகு, தேன் கலவையை எப்படி தயாரிப்பது? (How to make  pepper and honey mix): கருப்பு மிளகை நன்றாக அரைத்து ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு டீஸ்பூன் சுத்தமான தேன் சேர்த்து இரண்டையும் நன்கு கலந்து மெதுவாக நக்கி சாப்பிட வேண்டும். இதனை ஒருநாளுக்கு இரண்டு முதல் மூன்று முறை எடுத்துக்கொள்ளலாம். காலையில் வெறும் வயிற்றில் அல்லது இரவு தூங்குவதற்கு முன்பு இதனை சாப்பிடலாம். பகலில் வறட்டு இருமல் அதிகமாக இருந்தால் அதனை அப்போதும் கூட சாப்பிடலாம்.

தேன், மிளகு கலவை நன்மைகள் (benefits for home remedies): இந்த வீட்டு வைத்தியம் தொண்டை அரிப்பில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இருமலில் தீவிரத்தைக் குறைத்து ஈரப்பதமாக்குகிறது. இதனால் பேசுவது நமக்கு எளிதாக இருக்கும். வறட்டு இருமல் சமயத்தில் இதனை எடுத்துக்கொள்வது நிவாரணம் அளிக்கும்.

ADVERTISEMENT

இதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்: அதே சமயம் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தேன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், மிளகின் அளவு அதிகமாக இருக்கக் கூடாது எனவும் எச்சரிக்கப்படுகிறது. ஏனெனில் அது எரிச்சலை அதிகரிக்கும். அதுபோலவே இருமல் ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தால் அல்லது காய்ச்சல் ஏற்பட்டால், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது அல்லது. வெதுவெதுப்பான தண்ணீரை குடிப்பது, குளிர்ந்த உணவுகளைத் தவிர்ப்பதும் இருமலை தவிர்க்க உதவுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share