ADVERTISEMENT

புறம்போக்கு இடங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா : அரசாணை வெளியீடு!

Published On:

| By Kavi

Patta for 86 thousand residents

ஆட்சேபணையற்ற புறம்போக்கு இடங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. Patta for 86 thousand residents

அரசு புறம்போக்கு, மேய்க்கால் புறம்போக்கு, பெல்ட் ஏரியா, நீர்நிலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருகிறது. 

ADVERTISEMENT

இந்தநிலையில் கடந்த 17ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் 32 கிலோ மீட்டருக்குள் உள்ள பகுதிகளில் 29,187 குடும்பங்களுக்கும், அதேபோல் சென்னை மாநகராட்சி தவிர்த்து மற்ற மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஆட்சேபணையற்ற புறம்போக்கு இடங்களில் வசிக்கும் 57,000 குடும்பங்களுக்கும் பட்டா வழங்கவும் ஒட்டுமொத்தமாக 86,000 குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கவும் ஒப்பதல் அளிக்கப்பட்டது. 

அதற்கான அரசாணையை தமிழக அரசு ஏப்ரல் 26ஆம் தேதி வெளியிட்டிருக்கிறது. பட்டா வழங்குவதற்கான வழிமுறைகளில் திருத்தம் செய்து வருவாய் துறை அரசாணை வெளியிட்டுள்ளது

ADVERTISEMENT

அதில்,  குறிப்பிட்ட சில வகை புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்போருக்கு பட்டா வழங்க ஆண்டு வருமானம், ரூ.3  லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.  அதன்படி, நில ஒதுக்கீட்டு வரம்புகளும் திருத்தப்பட்டுள்ளன. அதாவது ஆண்டு வருமானம்  ரூ.5 லட்சமாக உள்ள குடும்பங்களுக்கு,3 சென்ட் நிலத்துக்கு பட்டா வழங்கப்படும்.

இதற்கான கட்டணத்தை பொறுத்தவரை 2 சென்ட் நிலத்திற்கு கட்டணம் கிடையாது. மீதமுள்ள ஒரு சென்ட்டுக்கு நில மதிப்பில், 25 சதவிகித தொகையை செலுத்த வேண்டும். 

ADVERTISEMENT

ஆண்டு வருமானம், ரூ.5  முதல் ரூ.12 லட்சத்திற்குள் இருப்பவர்களுக்கு 2 சென்ட்டுக்கு நில மதிப்பில்  50 சதவீத தொகையும், ஒரு சென்ட்டுக்கு நில மதிப்பில் 100 சதவீத தொகையையும் செலுத்த வேண்டும். Patta for residents of remote areas

 ரூ.12 லட்சத்திற்கு மேல் உள்ள குடும்பங்கள் 3 சென்ட்டுக்கும் நில மதிப்பில் 100 சதவீத தொகையை செலுத்த வேண்டும்.

6 மாதங்களில் பட்டா வழங்க வருவாய்த் துறை நடவடிக்கை  எடுத்து வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. Patta for 86 thousand residents

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share