சின்ன பையனுக்கு கல்யாணமா? – ‘பசங்க’ ஸ்ரீராமுக்கு டும் டும்!

Published On:

| By Selvam

pasanga actor sriram married her girlfriend

பசங்க படத்தில் நடித்த ஸ்ரீராம் தனது காதலி நிகில் பிரியாவை கரம்பிடித்துள்ளார்.

கடந்த 2007-ஆம் ஆண்டு கற்றது தமிழ் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீராம். pasanga actor sriram married her girlfriend

இதனை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் விமல் நடிப்பில் 2009-ஆம் ஆண்டு வெளியான பசங்க படத்தில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். பசங்க படத்தில் அவர் பேசிய வசனங்கள் மிகவும் பிரபலமானது. இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது ஸ்ரீராமுக்கு வழங்கப்பட்டது.

பின்னர் தமிழ் படம், தீராத விளையாட்டு பிள்ளை, வேங்கை, ஜில்லா, அடுத்த சாட்டை, ஸ்ட்ரீட் லைட் ஆகிய படங்களில் நடத்தார். தற்போது ஸ்ரீராம், பயோ டெக் ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக நிகில் பிரியா – ஸ்ரீராம் இருவரும் காதலித்து வந்தனர். இந்தநிலையில், நேற்று (ஜூன் 29) இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பசங்க ஜீவா கதாபாத்திரத்தில் பார்த்த ஸ்ரீராமை திருமண கோலத்தில் பார்த்த பலரும் ஷாக்காகி, ‘சின்ன பையனுக்கு கல்யாணமா? காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது?’ என்று சமூக வலைதளங்களில் வாழ்த்தி வருகின்றனர். pasanga actor sriram married her girlfriend

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share