ADVERTISEMENT

’குந்தவை’ திரிஷாவை வீட்டுக்குள்ளேயே ‘குந்த’வையுங்க.. பார்த்திபன் கமெண்ட் வைரல்

Published On:

| By Mathi

Parthipan Trisha

விஜய்- திரிஷா விவகாரத்தில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தெரிவித்துள்ள கமெண்ட் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

தவெக தலைவர் விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவகாரத்து கோரியுள்ளார். ஒரு நடிகையுடன் விஜய் தொடர்பில் இருப்பதாகவும் சங்கீதா குற்றம் சாட்டியிருந்தார்.

ADVERTISEMENT

இதனிடையே விஜய்யும் நடிகை திரிஷாவும் ஒரே காரில் ஒரே நிற உடையில் திருமண நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டது பெரும் விவாதப் பொருளானது.

இந்தச் சூழலில் நிகழ்ச்சி ஒன்றில் திரிஷாவின் போட்டோவை வைத்து இயக்குநரும் நடிகருமான பார்த்திபனிடம் கமெண்ட் கேட்கப்பட்டது.

ADVERTISEMENT

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷா நடித்திருந்தார். அதனை சுட்டிக்காட்டி பார்த்திபன் தெரிவித்த கமெண்ட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

’குந்தவை’ எனும் திரிஷா குறித்த பார்த்திபன் கமெண்ட்:
இந்த குந்தவையை கொஞ்ச நாள் குந்தவைக்கறது (உட்கார வைப்பது) நல்லது. இந்த குந்தவையை வீட்டுக்குள்ளேயே குந்தவைக்கறது கொஞ்சம் நல்லதுங்க, வெளிய வராம பாத்துக்கங்க. அதுனால நிறைய பிரச்சனைகள் உண்டாகாம பாத்துக்கலாம். அதுனால சில கவிதைகளை ரசிக்கலாமே தவிர, அந்த கவிதையை சொல்லாம இருக்கிறது பெட்டர்னு நினைக்கிறேன். இவ்வாறு பார்த்திபன் கூறியிருந்தார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share