குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஜனவரி 28-ந் தேதி தொடங்கியது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று முதல் ஏப்ரல் 2-ந் தேதி வரை 2 அமர்வுகளாக நடைபெறுகிறது. பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் 2026 தாக்கல் செய்யப்பட உள்ளது.
நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுவது மரபு.
இதனடிப்படையில் இன்று காலை நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி உள்ளிட்டோருடன் நாடாளுமன்றத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.
பின்னர் நாடாளுமன்றத்தின் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் திரவுபதி முர்மு உரையாற்றினார். தமது உரையில், மத்திய அரசின் திட்டங்களைப் பட்டியலிட்டு பெருமிதம் தெரிவித்தார் திரவுபதி முர்மு.
இதனிடையே 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்கள் எழுப்பியதால் நாடாளுமன்றத்தில் அமளி நிலவியது.
