நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஜனவரி 28-ந் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர் ஏப்ரல் 2-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 1-ந் தேதி 2026-27-ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை- பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இன்று முதல் பிப்ரவரி 13-ந் தேதி வரை முதல் கட்டமாகவும் மார்ச் 9-ந் தேதி முதல் ஏப்ரல் 2-ந் தேதி வரை 2-வது கட்டமாகவும் இக்கூட்டத் தொடர் நடைபெறும்.
இந்த ஆண்டு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற இருப்பதால் இம்மாநிலங்களுக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்களை இக்கூட்டத் தொடரில் மத்திய அரசு அறிவிக்கக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
