பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா-வின் நிறுவனர் ஹபீஸ் சயீத்தின் வலதுகரம் முப்தி ஹபிபுல்லா ஹக்கானி, பாகிஸ்தானில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. Pakistan Hafiz Saeed Haqqani
பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களின் தளபதிகள் பலரும் தொடர்ந்து ‘மர்ம நபர்களால்’ சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் குடும்பத்தினர் மற்றும் அவரது கூட்டாளிகளும் இதேபோல மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த வரிசையில் ஹபீஸ் சயீத்தின் வலதுகரமான ஹக்கானி பாகிஸ்தானின் Dir பகுதியில் இன்று ஜூலை 3-ந் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பான கூடுதல் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.