ADVERTISEMENT

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்த பாகிஸ்தான்

Published On:

| By Kavi

Pakistan abrogates Shimla Agreement

சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திய நிலையில் சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது. Pakistan abrogates Shimla Agreement

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இந்த தாக்குதலை நடத்தியவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து செப்டம்பர் 19. 1960-ல் கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியது. Pakistan abrogates Shimla Agreement

சிந்து நதி என்பது இந்தியாவுக்குள் பாயும் 3 நதிகளான ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் மற்றும் அவற்றின் துணை நதிகளையும் மற்றும் பாகிஸ்தானுக்குள் பாயும் 3 நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் மற்றும் அவற்றின் துணை நதிகளையும் உள்ளடக்கியது. இந்த சிந்து நதி ஒப்பந்தத்தின் மூலம் பாகிஸ்தான் 80 சதவிகித நதிநீர் கட்டுப்பாட்டையும், இந்தியா 20 சதவிகித நதிநீர் கட்டுப்பாட்டையும் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

அதாவது சிந்து நதி நீரை பெரும்பாலும் பாகிஸ்தான் பயன்படுத்துகிறது. தற்போது பாகிஸ்தானில் தண்ணீர் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில் பஹல்கம் தாக்குதலுக்கு எதிரொலியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் ராம்பன் அணையின் மதகுகளை இந்தியா மூடி உள்ளது.

பாக் நடவடிக்கை! Pakistan abrogates Shimla Agreement

இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் இன்று (ஏப்ரல் 24) உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியது போர் நடவடிக்கையாக கருதப்படும் என்று கூறியுள்ள பாகிஸ்தான், சிம்லா ஒப்பந்தத்தையும் இந்தியாவுடனான அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

இந்தியாவை தொடர்ந்து வாகா எல்லையையும் பாகிஸ்தான் மூடியது.

 இந்திய நாட்டினருக்கான அனைத்து சார்க் விசாக்களையும் நிறுத்தி வைத்துள்ளது

இந்திய பாதுகாப்பு, கடற்படை மற்றும் விமான ஆலோசகர்களை அனுமதியற்றவர்களாக அறிவித்து, ஏப்ரல் 30, 2025 க்குள் அவர்களை வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள இந்திய உயரதிகாரிகளின் எண்ணிக்கையை 30ஆகவும் குறைத்துள்ளது.

சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன?Pakistan abrogates Shimla Agreement

சிம்லா ஒப்பந்தம் என்பது, 1971 ஆம் ஆண்டுக்கு பின், போருக்குப் பிந்தைய பதட்டங்களைக் குறைப்பதற்கும் இரு நாடுகளுக்கும் இடையில் அமைதியான சூழலை ஊக்குவிப்பதற்கும் போடப்பட்டது.

இது, இரு நாடுகளுக்கும் இடையிலான எதிர்கால உறவுகளுக்கான கட்டமைப்பை வழங்குகிறது. போர்க் கைதிகளைத் திருப்பி அனுப்புதல், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின் பரிமாற்றம் மற்றும் காஷ்மீர் சர்ச்சை போன்ற போருக்குப் பிறகு எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு  காணப்படும் என்பது இதன் நோக்கமாகும். Pakistan abrogates Shimla Agreement

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share