ADVERTISEMENT

பஹல்காம் தாக்குதல் : ஜி20 நாடுகளுக்கு விளக்கமளித்த இந்தியா!

Published On:

| By Kavi

Pahalgam attack India explains

பஹல்காம் தாக்குதல் குறித்து ஜி20 நாடுகளின் தூதர்களுக்கு இந்திய வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது. Pahalgam attack India explains

ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 29 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.

ADVERTISEMENT

இதற்கு பதிலடி கொடுக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. ஐஎன்எஸ் விக்ராந்த் மூலம் அரபிக் கடலில் இருந்தவாறு இந்தியா ஏவுகணை சோதனை நடத்தியது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து பேசினர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் பாகிஸ்தான் மீதான நடவடிக்கை தொடர்பாகவும் தீவிரவாத தாக்குதல் தொடர்பாகவும் பேச ஜி 20 நாடுகளின் தூதர்களை இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் அழைத்தது.

இதன் பெயரில் பாகிஸ்தானுடன் எல்லா காலத்திலும் நட்பு நாடாக இருக்கும் சீனா இந்த ஆலோசனை கூட்டத்திற்கு வந்தது. Pahalgam attack India explains

ADVERTISEMENT

கனடா, ஜெர்மனி, ஜப்பான், போலந்து, இங்கிலாந்து மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளின் தூதர்கள் வெளியுறவுத் துறை அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.

அவர்களிடம் சுமார் 30 நிமிடங்கள் இந்திய அதிகாரிகள் பேசி இருக்கின்றனர். அப்போது காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் குறித்து வெளிநாட்டு தூதர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தை தொடர்ந்து தற்போது மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.

முன்னதாக காஷ்மீர் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யா அதிபர் புதின், பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரோன், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. Pahalgam attack India explains

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share