வைஃபை ஆன் செய்ததும், “குளிரை எல்லாம் பஞ்சா பறக்கு வைக்குதுய்யா எலக்ஷன் அனல்” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
என்னப்பா அனல் பறக்கும் மேட்டர்?
விஜய்யின் தவெக கூட்டணியில இணையப் போற கட்சிகள் லிஸ்ட் சீக்கிரமா வெளி வரப் போகுதாம்.. அதுக்கான பேச்சுவார்த்தைகள் ரொம்ப மும்முரமாக நடக்குதாம்..
ஆஹா.. தவெக கூட்டணியில எந்த கட்சிகள் இருக்கப் போகுதாம்?
விஜய்யை சிஎம் வேட்பாளராக ஏத்துகிட்டாதான் கூட்டணின்னு சொல்லிட்டாங்க.. இதையும் சரி சரின்னு ஏத்துகிட்டுதான் ஓபிஎஸ், தினகரன் தரப்பு, தவெக பொதுச்செயலாளர் அருண்ராஜூடன் சீரியசாக பேச்சுவார்த்தை நடத்திகிட்டு இருக்கு..
அருண்ராஜ்தான் முதன் முதல்ல விஜய்யின் ஒப்புதல் இல்லாமலேயே டிடிவி தினகரனுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்துனவருன்னு நாம டிஜிட்டல் திண்ணையில் ஷேர் செஞ்சிருந்தோம்..
இந்த பேச்சுவார்த்தையை பத்தி தினகரன் தரப்புல கேட்டப்ப, “தென் மாவட்டத்துல எங்க வோட் பேங்க் என்னான்னு போன தேர்தலிலேயே காண்பிச்சுட்டோம்.. இப்ப சப்போர்ட்டுக்கு TVK வந்தா பல தொகுதிகளில்லா ஈசியா ஜெயிச்சுடுவோம்.. அதுக்குதான் கூட்டணி பேச்சுவார்த்தையே நடக்குது..
இந்த நிமிஷம் வரைக்கும் எல்லாமே சூப்பரா, சுமூகமாக போய்கிட்டு இருக்கு.. மொத்தமா 40 தொகுதிகளை கேட்டிருக்கிறோம்.. ஓபிஎஸ்-க்கும் சேர்த்துதான்.. தவெககிட்ட இருந்து 40 தொகுதிகளை வாங்கி நாங்க ரெண்டு பேரும் பிரிச்சுக்கலாம்னு பேசிகிட்டிருக்கிறோம்.. பொங்கல் பிறக்கட்டும்.. எல்லாம் ஓபனாகவே வந்துவிடும்” என சொல்வதாக டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் நுழைந்தது வாட்ஸ் அப்.
