சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ் செங்கோட்டையன் : பார்க்காமலேயே புறப்பட்ட டிடிவி தினகரன்

Published On:

| By Kavi

பசும்போனில் சசிகலாவை, ஓபிஎஸ் செங்கோட்டையன் இருவரும் சந்தித்து பேசிய நிலையில், டிடிவி தினகரன் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.

பசும்பொன்னில் இன்று (அக்டோபர் 30) முத்துராமலிங்க தேவரின் குருபூஜை நடைபெற்றது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அமமுக பொதுச்செயலாளர் செங்கோட்டையன் மூன்று பேரும் சேர்ந்து வந்து தமிழக அரசியலை பரபரப்பாக்கியுள்ளனர்.

ADVERTISEMENT

மூன்று பேரும் ஒரே மாலையை தேவர் சிலைக்கு சிரித்த முகத்துடன் செலுத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்குவதில் எந்த தயக்கமும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதற்கிடையே பசும்பொன்னில் ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் மூன்று பேரும் பசும்பொன்னில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர்.

அப்போது செங்கோட்டையன் பேசுகையில், ‘என்னை கட்சியில் இருந்து நீக்கினால் மகிழ்ச்சி தான்’  என்றார்.

ADVERTISEMENT

சின்னாம்மாவும் எங்களுடன் உறுதியாக இணைவார் என்று ஓபிஎஸ் கூறினார்.

டிடிவி தினகரன் கூறுகையில், சின்னம்மா கால தாமதமாக கிளம்பியதால் தற்போது வரமுடியவில்லை. ஓபிஎஸும், செங்கோட்டையனும் எனக்கு முன்பே கிளம்பி வந்தனர். பின்னர் எனக்காக சிறிது நேரம் ஓரிடத்தில் காத்திருந்தனர்’ என்றார்.

இதைத்தொடர்ந்து அங்கு வந்திருந்தவர்களுக்கு ஓபிஎஸும், செங்கோட்டையனும் இணைந்து சாப்பாடு பரிமாறினார்கள்.

இதையடுத்து பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கு வந்த சசிகலாவை ஓபிஎஸ், செங்கோட்டையன் இருவரும் சந்தித்து பேசினர்.

ஆனால் டிடிவி தினகரன் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டதால் சசிகலாவை சந்திக்கவில்லை.

சசிகலாவை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், ‘ பொறுத்திருந்து பார்ங்கள்’ என்று கூறிவிட்டு புறப்பட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share