அன்புமணி அறிவித்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கேட்டு ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்தார்.
நாளை (ஆகஸ்ட் 9) மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழு நடைபெறும் என்று அக்கட்சித் தலைவர் அன்புமணி அறிவித்தார். இதற்கு தடை கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் நிறுவனர் ராமதாஸ்.
இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அன்புமணியையும், ராமதாஸையும் நேரில் வர சொன்னார்.
ஆனால் ராமதாஸ் வரவில்லை. அவர் காணொளி காட்சி மூலமும், அன்புமணி நேரடியாகவும் ஆஜரானார்கள்
இருவரிடம் பேசிய நீதிபதி மீண்டும், இரு தரப்பு வழக்கறிஞர்களிடம் வாதங்களை கேட்டார்.
இந்தசூழலில் ராமதாஸின் மனுவை தள்ளுபடி செய்து, அன்புமணிஅறிவித்த பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கியுள்ளார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். .
இதனால் திட்டமிட்டபடி நாளை பொதுக்குழு நடைபெறும் என்று அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். இதில் ராமதாஸும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
தற்போது ராமதாஸ் தரப்பில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.