மக்களவையில் Operation Sindoor குறித்து இன்று 16 மணிநேர விவாதம்!

Published On:

| By Mathi

Operation Sindoor

நாடாளுமன்ற மக்களவையில் Operation Sindoor ராணுவ நடவடிக்கை தொடர்பாக இன்று ஜூலை 28-ந் தேதி விவாதம் நடைபெற உள்ளது. இந்த விவாதம் மொத்தம் 16 மணிநேரம் நடைபெறும்.

நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் பாகிஸ்தானுக்கு எதிரான Operation Sindoor ராணுவ நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. இந்த கோரிக்கையை முன்வைத்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. நாடாளுமன்ற இரு அவைகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதனையடுத்து Operation Sindoor குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டது. இந்த விவாதம் இன்று மக்களவையிலும் நாளை மாநிலங்களவையிலும் நடைபெற உள்ளது. இந்த விவாதங்களுக்கு மொத்தம் 16 மணிநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Operation Sindoor பற்றிய இந்த விவாதத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்று பதிலளிக்க உள்ளனர். இதனால் மக்களவையில் வாதஙகள் அனல் பறக்கும் என்பது எதிர்பார்ப்பு.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share