கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு படகுகளில் செல்ல இன்று முதல் ஆன்லைனில் டிக்கெட் எடுத்துக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனால் விவேகானந்தர் பாறைக்கு படகுகளில் செல்ல நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் தற்போது நிலவுகிறது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர் இதை தவிர்க்கும் வகைளில் இன்று முதல் விவேகானந்தர் பாறைக்கு படகுகளில் செல்ல ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுத்துக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் https:www.psckfs.tn.gov.in என்ற இணைய தளத்தில் இனி டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது