இந்தியாவில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. மக்களின் ஆயுட்காலம் அதிகரிப்பது, மருத்துவச் செலவுகள் உயருவது, குடும்ப அமைப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை வயதான காலத்தை தனிப்பட்ட பிரச்சனையாக மட்டும் இல்லாமல், ஒரு பொதுவான கொள்கை சார்ந்த சவாலாக மாற்றியுள்ளது. 2026 பட்ஜெட்டுக்கு முன்னதாக, முதியோர் பராமரிப்புத் துறை மற்றும் சிவில் சமூக அமைப்புகள் நிதிப் பாதுகாப்பு, சிறந்த சுகாதார வசதிகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பராமரிப்பு அமைப்பு போன்றவற்றுக்கு வலுவான கோரிக்கைகளை முன்வைக்கின்றன.
முதியோர் பராமரிப்பு தேவை:
இந்தியாவின் முதியோர் பராமரிப்பு அமைப்பை வடிவமைப்பதில் பட்ஜெட் முக்கியப் பங்கு வகிக்கும். “வரவிருக்கும் பட்ஜெட் குறிப்பிட்ட கொள்கை தலையீடுகள் மூலம் இந்தியாவின் முதியோர் பராமரிப்பு அமைப்பை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பராமரிப்பு இல்லங்கள் மற்றும் வீட்டிலேயே வழங்கப்படும் சேவைகளில் நீண்டகாலப் பராமரிப்பை உள்ளடக்கிய காப்பீட்டு வரம்பை விரிவுபடுத்துவது அணுகலை கணிசமாக மேம்படுத்தும் என்கின்றனர்.
இதன் மூலம், மூத்த குடிமக்கள் தங்கள் சொத்து மதிப்பில் 80% வரை நகரங்களுக்கு இடையே பயன்படுத்திக் கொள்ள முடியும். முதியோர் பராமரிப்புக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்குவது, மலிவான, நீண்டகால நிதியை ஈர்க்கவும், நகரங்களில் தரமான வசதிகளை ஊக்குவிக்கவும் உதவும். மற்றொரு முக்கிய கோரிக்கை வரிச் சலுகை ஆகும். முதியோர் பராமரிப்பு சேவைகளை ஜிஎஸ்டியில் (GST) இருந்து விலக்கு அளிப்பது அல்லது சுகாதார சேவைகளுக்கு இணையாக வரி விதிப்பது, முதியவர்கள் ஆரோக்கியமாக வயதாக உதவுவதில் அவற்றின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பல குடும்பங்கள் பராமரிப்புச் சேவைகளுக்கு பணம் செலுத்த சிரமப்படுகின்றன. ஏனெனில் காப்பீடு அவற்றை போதுமான அளவு ஈடுசெய்வதில்லை. மற்றொரு முக்கியப் பகுதி பணியாளர் மேம்பாடு ஆகும். முதியோர் மருத்துவத்தில் (Geriatrics) மருத்துவமற்ற பராமரிப்பு நிபுணர்களுக்கு பெரிய அளவில் பயிற்சி அளிப்பதோடு, தரப்படுத்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் பராமரிப்புப் பணியை ஒரு திறமையான தொழிலாக முறையாக அங்கீகரிப்பதும் வலுவான தேவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சுகாதாரம் மற்றும் ஓய்வூதியம்:
முதியோர்களுக்கு சுகாதாரக் காப்பீடு மற்றும் ஓய்வூதியம் ஆகியவை அவசரப் பிரச்சனைகளாகவே உள்ளன. பெரும்பாலான வயதானவர்களுக்கு அணுகல் மற்றும் காப்பீடு இன்னும் குறைவாகவே இருக்கிறது. 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ள உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு போன்ற சமீபத்திய அரசாங்க முயற்சிகள் குறித்த விழிப்புணர்வு இல்லை. மேலும் பல ஓய்வூதியத் திட்டங்களும் சரியாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. எனவே, காப்பீடு மற்றும் ஓய்வூதியம் ஆகிய இரண்டும் முதியோர்களுக்கு சரியான முறையில் சென்று சேர வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மொத்தத்தில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் வயதான மக்கள்தொகையின் யதார்த்தங்களுக்கு இந்தியாவைத் தயார்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. சுகாதாரம், காப்பீடு, ஓய்வூதியம், பராமரிப்பு மற்றும் வரிச் சலுகைகள் என அனைத்திலும் ஒருங்கிணைந்த ணுகுமுறை தேவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த எதிர்பார்ப்புகள் சரியாக நிறைவேற்றப்பட்டால் மில்லியன் கணக்கான மூத்த குடிமக்கள் வரும் ஆண்டுகளில் அதிக பாதுகாப்பு மற்றும் மன அமைதியுடன் வாழ முடியும்
