செரிமான பிரச்சனைகள் இருக்கா?.. வெண்டைக்காய் செய்யும் அற்புதம்!

Published On:

| By Santhosh Raj Saravanan

Okra help digestive problems and regulates sugar

வெண்டைக்காய் சாப்பிடுவது நமது உடலுக்கு மிகவும் நல்லது. அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், நன்மைகளைப் பார்ப்போம்.

நமது உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்க காய்கறிகள் மிகவும் முக்கியமானவை. குறிப்பாக எளிதாக கிடைக்கும் காய்கறிகளை நாம் அன்றாடம் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம். அப்படி நமக்கு எளிதில் கிடைக்கும் காய்களில் ஒன்று வெண்டைக்காய். வருடத்தின் அனைத்து நாட்களும் வெண்டைக் காய் நமக்கு கிடைக்கும்.

ADVERTISEMENT

வெண்டைக்காய் நன்மைகள் (Benefits of okra): வெண்டைக்காய் சுவையானது மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை அளிக்கும். பச்சை நிறம் கொண்ட மிக மென்மையான வெண்டைக்காய் உடலை உள்ளிருந்து வலுப்படுத்த உதவும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. வெண்டைக் காயை குழம்பு வைத்தோ, சூப்பாகவோ, சாலட்டாகவோ, வறுவல் செய்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம். வெண்டைக்காயின் நன்மைகள் சிலவற்றைப் பார்க்கலாம்.

செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது (ladyfinger for digestion): வெண்டைகாயில் கரையக்கூடிய நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இது வயிற்றை சுத்தப்படுத்தி, மலச்சிக்கலை போக்க உதவுகிறது. இது குடல் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு வாயு, அஜீரணம் உள்ளிட்டவற்றில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. அடிக்கடி வயிற்றுப் பிரச்சனையால் அவதிப்படும் நபர்கள் வெண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

ADVERTISEMENT

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது (ladyfinger for diabetes):  சர்க்கரை நோயாளிகளுக்கு வெண்டைக்காய் பல நன்மைகளை அளிக்கிறது. இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து, ஆக்சிஜனேற்றிகள் உடலில் சர்க்கரை அளவை சீராக்க உதவுகின்றன. நார்ச்சத்து கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுவதோடு, இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. இதில் வைட்டமின் சி, ஏ உள்ளதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. ஆரோக்கியமாக முடியை பராமரிக்க உதவுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share