மதுரையில் வரும் செப்டம்பர் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியின் மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து கடந்த மாதம் ஜூலை 14ம் தேதி ஓ.பன்னீர் செல்வம் வெளியேறினார். பின்னர் மதுரையில் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மதுரை மாநாடு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், “14-07-2025 அன்று சென்னை, வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள YMCA திருமண மண்டபத்தில் நடைபெற்ற தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க 04-09-2025 அன்று மதுரையில் நடைபெறுவதாக இருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு கழக உயர்மட்டக் குழு ஆலோசனையின்படி ஒத்திவைக்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.