சிங்கப்பூரில் இலவசமாகப் படிக்கலாம்… மாதம் கைநிறையச் சம்பளம்! கல்லூரி மாணவர்களே… பாஸ்போர்ட் ரெடியா?

Published On:

| By Santhosh Raj Saravanan

nus iris internship program 2026 singapore research opportunity students

“வெளிநாட்டுக்குப் போய் படிக்கணும்னு ஆசை… ஆனா அப்பா பாக்கெட்ல காசு இல்லையே!”னு கவலைப்படுறீங்களா? அந்தக் கவலையைத் தூக்கிப் போடுங்க. விமானச் செலவு, தங்குமிடம், சாப்பாடு என எல்லாச் செலவையும் ஏற்றுக்கொண்டு, கைமேல சம்பளமும் கொடுத்து உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது சிங்கப்பூர்.

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (National University of Singapore – NUS), சர்வதேச மாணவர்களுக்காக ‘ஐரிஸ்’ (IRIS) என்ற பெயரில் ஒரு சூப்பர் இன்டர்ன்ஷிப் திட்டத்தை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

என்னது இது ‘ஐரிஸ்’?

IRIS – அதாவது ‘Interdisciplinary Research Internship in Singapore’. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத் துறையில் சாதிக்கத் துடிக்கும் மாணவர்களுக்கான பிரத்யேக ஆராய்ச்சிப் பயிற்சி இது. சும்மா வகுப்பறையில் உட்கார்ந்து பாடம் படிப்பது போல் அல்லாமல், அதிநவீன ஆய்வகங்களில் நேரடிப் பயிற்சி (Hands-on Experience) கிடைக்கும்.

ADVERTISEMENT

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

  • படிப்பு: இளங்கலை (Bachelor’s) அல்லது முதுகலை (Master’s) படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, பொறியியல் (Engineering), சயின்ஸ் (Science), கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
  • வருடம்: கல்லூரிப் படிப்பின் இறுதியாண்டுக்கு முந்தைய வருடம் (Pre-final year) அல்லது இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் இதற்குத் தகுதியானவர்கள்.
  • தகுதி: படிப்பில் சுட்டியாக இருக்க வேண்டும். இதுவரை நடந்த செமஸ்டர் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் (GPA) வைத்திருப்பது அவசியம்.

சலுகைகள் என்ன? தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஜாக்பாட் காத்திருக்கிறது:

ADVERTISEMENT
  • உதவித்தொகை: பயிற்சியின் போது மாதம் தோறும் கணிசமான தொகை (Stipend) வழங்கப்படும்.
  • மற்றவை: தங்குமிடம் மற்றும் இதர செலவுகளுக்கும் பல்கலைக்கழகமே உதவி செய்யும்.
  • சுமார் 2 முதல் 3 மாதங்கள் வரை சிங்கப்பூரில் தங்கிப் படிக்கும் வாய்ப்பு.

விண்ணப்பிப்பது எப்படி? விருப்பமுள்ள மாணவர்கள் NUS-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். உங்கள் மதிப்பெண் சான்றிதழ்கள், ரெஸ்யூம் (Resume) மற்றும் நீங்கள் ஏன் இந்த ஆராய்ச்சியைச் செய்ய விரும்புகிறீர்கள் என்பதற்கான காரணம் (Research Proposal) ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

சிங்கப்பூர் விசா கிடைப்பது குதிரைக் கொம்பா இருக்கிற இந்த டைம்ல, இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கிறது அரிது. சும்மா அப்ளை பண்ணுவோம்னு பண்ணாம, ஒரு நல்ல ‘Statement of Purpose’ (SOP) ரெடி பண்ணுங்க. உங்க காலேஜ் புரொபசர் கிட்ட ஒரு ஸ்ட்ராங் ரெக்கமண்டேஷன் லெட்டர் வாங்கி வைங்க. ஃபாஸ்போர்ட் இல்லாதவங்க உடனே தட்கல்ல அப்ளை பண்ணிடுங்க பாஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share