ADVERTISEMENT

NPCILல் மத்திய அரசு வேலை… 114 காலியிடங்கள்! டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு ‘ஜாக்பாட்’ வாய்ப்பு! சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Published On:

| By Santhosh Raj Saravanan

npcil recruitment 2026 scientific assistant 114 vacancies apply online

“டிப்ளமோ முடிச்சுட்டு பிரைவேட் கம்பெனில கம்மியான சம்பளத்துக்கு வேலை பாக்குறதா? இல்ல, டிகிரி முடிச்சுட்டு நல்ல கவர்மெண்ட் வேலைக்காகக் காத்துட்டு இருக்கீங்களா?” என்று ஏங்கும் இளைஞர்களுக்கு இதோ ஒரு மகிழ்ச்சியான செய்தி!

மத்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் செயல்படும் இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப 2026ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கைநிறைய சம்பளம், மத்திய அரசுப் பணிப் பாதுகாப்பு, மற்றும் கௌரவமான பதவி என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் அரிய வாய்ப்பு இது.

ADVERTISEMENT

வேலை என்ன? காலியிடங்கள் விவரம்: மொத்தம் 114 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ‘சயின்டிஃபிக் அசிஸ்டென்ட்’ (Scientific Assistant) மற்றும் ‘ஸ்டைபன்டரி ட்ரைனி’ (Stipendiary Trainee) வகையைச் சார்ந்தவை.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? (Qualification): இந்த வேலைக்குப் பொறியியல் டிப்ளமோ (Diploma in Engineering) மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு (B.Sc) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT
  • டிப்ளமோ பிரிவுகள்: மெக்கானிக்கல் (Mechanical), எலக்ட்ரிக்கல் (Electrical), எலக்ட்ரானிக்ஸ் (Electronics), இன்ஸ்ட்ருமென்டேஷன் (Instrumentation) போன்ற துறைகளில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
  • டிகிரி பிரிவுகள்: பி.எஸ்சி (B.Sc) இயற்பியல் (Physics) அல்லது வேதியியல் (Chemistry) படித்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே.
  • மதிப்பெண்: படிப்பில் குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியம்.

வயது வரம்பு & சம்பளம்:

  • விண்ணப்பதாரர்கள் பொதுவாக 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் (வயது தளர்வு மற்றும் விரிவான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்).
  • சம்பளம்: இது ஒரு ‘ட்ரைனி’ (Trainee) பணி என்று பார்க்காதீர்கள். பயிற்சி காலத்தில் மாதம் ரூ.24,000 வரை உதவித்தொகை (Stipend) கிடைக்கும்.

பயிற்சி முடிந்த பிறகு, அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள். அப்போது 7ஆவது ஊதியக் குழுவின்படி, மாதம் ரூ.60,000க்கும் மேல் (அடிப்படை சம்பளம் + படிகள் சேர்த்து) சம்பளம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இது பல ஐடி கம்பெனி சம்பளத்தை விட அதிகம்!

ADVERTISEMENT

தேர்வு முறை (Selection Process): விண்ணப்பதாரர்கள் இரண்டு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள்:

  • எழுத்துத் தேர்வு (Written Test): இதில் உங்கள் பாடம் சார்ந்த கேள்விகள் மற்றும் பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும்.
  • நேர்காணல் (Personal Interview): எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் NPCILன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கடைசித் தேதி முடிவதற்குள் விண்ணப்பிப்பது நல்லது.

பலரும் ‘Trainee’ (பயிற்சி) என்று பார்த்தவுடனே, ‘இது ஏதோ டெம்பரவரி வேலை போல’ என்று நினைத்து விண்ணப்பிக்காமல் விட்டுவிடுவார்கள். அதுதான் அவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு! NPCILல் பயிற்சி முடித்தவுடன் நீங்கள் ‘Scientific Assistant-B’ ஆகிவிடுவீர்கள். இது கெசட்டட் ரேஞ்சுக்கு இணையான ஒரு பவர்ஃபுல் பதவி.

மேலும், எழுத்துத் தேர்வைப் பொறுத்தவரை, நீங்கள் டிப்ளமோ அல்லது டிகிரியில் படித்த பாடங்களை (Core Subjects) மட்டுமேத் தெளிவாகப் படித்தாலே போதும். பெரிய அளவில் கோச்சிங் சென்டர் செல்ல வேண்டிய அவசியமில்லை. உங்கள் கல்லூரிப் பாடப்புத்தகங்களைத் தூசி தட்டிப் படித்தாலே ஈசியாக பாஸ் ஆகிவிடலாம். வடமாநிலத்தவர்கள் போட்டி போடுவதற்குள், நம்ம ஊர் பசங்க இந்த வாய்ப்பைத் தட்டித் தூக்குங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share