ADVERTISEMENT

WEATHER: இன்று முதல் வடகிழக்கு பருவமழை- நெல்லை, தென்காசி தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை

Published On:

| By Mathi

Weather Rain

நாட்டில் வடகிழக்கு பருவமழை (Northeast Monsoon) இன்று முதல் தொடங்கும் என்றும் தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ADVERTISEMENT

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு பருவமழை இன்று முதல் (அக்டோபர் 16) விலகக் கூடும். தமிழகம், புதுச்சேரி – காரைக்கால், கேரளா – மாஹே, கர்நாடகா, ராயலசீமா, தென் கடலோர ஆந்திரா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்க கூடும்.

தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அக்டோபர் 19-ந் தேதியன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.

ADVERTISEMENT

கடலோர தமிழகம், குமரி கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று முதல் முதல் வரும் 18-ந் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யக் கூடும்.

தமிழகத்தில் இன்று
தேனி
தென்காசி
திருநெல்வேலி
ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி
விழுப்புரம்
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
சென்னை
திருவள்ளூர்
கடலூர்
கன்னியாகுமரி
தூத்துக்குடி
விருதுநகர்
மதுரை
சிவகங்கை
திண்டுக்கல்
திருப்பூர்
கோவை
நீலகிரி
ஈரோடு
புதுக்கோட்டை
தஞ்சாவூர்
திருவாரூர்
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொட்டித் தீர்த்த கனமழை= நெல்லையில் விடுமுறை

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை தொடருவதால் தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share