“பகல்ல வெயில் கொளுத்துது… வாங்க நிலா வெளிச்சத்துல ஊர் சுத்தலாம்!” – 2026-ன் புது ட்ரெண்ட் ‘நாக்டர்ரிசம்’ (Noctourism)

Published On:

| By Santhosh Raj Saravanan

noctourism night tourism trend 2026 stargazing midnight museums climate change travel tamil

வழக்கமாகச் சுற்றுலா சென்றால் என்ன செய்வோம்? காலையில் எழுந்து குளித்துவிட்டு, வெயில் வருவதற்குள் நாலைந்து இடங்களைப் பார்த்துவிட்டு, இரவில் ஹோட்டல் அறையில் வந்து படுப்போம். இதுதான் பழைய ஸ்டைல்.

ஆனால், 2026-ல் சுற்றுலாப் பயணிகளின் பழக்கம் தலைகீழாக மாறியிருக்கிறது. “பகலில் தூக்கம்… இரவில் சுற்றல்” என்பதுதான் இன்றைய ட்ரெண்ட். இதற்குப் பெயர்தான் நாக்டர்ரிசம்‘ (Noctourism) அல்லது இரவு நேரச் சுற்றுலா.

ADVERTISEMENT

ஏன் இந்த மாற்றம்? இதற்கு முக்கியக் காரணம் – காலநிலை மாற்றம் (Climate Change). ஐரோப்பா முதல் இந்தியா வரை பகல் நேர வெப்பம் 45 டிகிரியைத் தாண்டுவதால், சுற்றுலாப் பயணிகள் வெளியே தலைகாட்டவே அஞ்சுகின்றனர். “ஏசி அறையை விட்டு வெளியே வந்தால் வியர்க்கிறது, பிறகு எதற்கு டூர்?” என்று அலுத்துக்கொள்பவர்களுக்காகவே, சுற்றுலாத் துறை இரவில் விழித்துக்கொண்டது.

என்னென்ன செய்யலாம்? இரவுச் சுற்றுலா என்பது வெறும் ‘பப்’ (Pub) கலாச்சாரம் அல்லது பார்ட்டி செய்வது மட்டுமல்ல. இது ஒரு அமைதியான தேடல்.

ADVERTISEMENT
  1. நட்சத்திரங்களை ரசித்தல் (Stargazing Tours): நகர விளக்குகள் இல்லாத, இருண்ட வானத்தைப் பார்ப்பதற்கென்றே ‘டார்க் ஸ்கை ரிசர்வ்ஸ்’ (Dark Sky Reserves) இடங்களுக்குப் படையெடுக்கிறார்கள். தொலைநோக்கி மூலம் கிரகங்களையும், பால்வீதியையும் (Milky Way) ரசிப்பது இப்போது மிகவும் பிரபலம்.
  2. மிட்நைட் மியூசியம் (Midnight Museums): உலகப்புகழ் பெற்ற பல அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்கூடங்கள் இப்போது நள்ளிரவு வரை திறந்திருக்கின்றன. பகலில் இருக்கும் இரைச்சல் இல்லாமல், குளிர்ந்த இரவில் ஓவியங்களையும், சிலைகளையும் ரசிப்பது ஒரு தனி அனுபவம்.
  3. இரவுச் சந்தைகள் (Night Markets): தாய்லாந்து போன்ற நாடுகளில் மட்டுமே இருந்த இரவு நேர உணவுத் திருவிழாக்கள் மற்றும் ஷாப்பிங் சந்தைகள், இப்போது உலகம் முழுவதும் பரவிவிட்டன.

விலங்குகளின் உலகம்: விலங்கியல் பூங்காக்களிலும் (Zoos) இப்போது ‘நைட் சஃபாரி’ (Night Safari) அதிகரித்து வருகிறது. பல விலங்குகள் பகலில் தூங்கிவிட்டு இரவில் தான் சுறுசுறுப்பாக இருக்கும். அவற்றைப் பார்க்க இதுவே சரியான நேரம்.

மாறும் பொருளாதாரம்: பகலில் வெப்பம் காரணமாக முடங்கும் பொருளாதாரத்தை ஈடுகட்ட, பல நகரங்கள் “24 மணி நேரப் பொருளாதாரமாக” மாறி வருகின்றன.

ADVERTISEMENT

காலநிலை மாற்றம் நம்மை எப்படியெல்லாம் மாற்றுகிறது பார்த்தீர்களா? சூரியனைத் தவிர்த்துவிட்டு, இனி நிலா வெளிச்சத்தில் ஊர் சுற்றுவதுதான் ‘கூல்’ (Cool)!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share