ADVERTISEMENT

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெண் போராளி… டிரம்ப் ஏமாற்றம்!

Published On:

| By christopher

Nobel Peace Prize goest to venis female activist

அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டைச் சேர்ந்த பெண் போராளி மரியா கொரொனா மச்சோடாவுக்கு இன்று (அக்டோபர் 10) அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 6ஆம் தேதி முதல் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இதுவரை மருத்​து​வம், இயற்​பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அந்த வகையில் லட்சக்கணக்கான மக்களின் நலன் கருதி உலக அமைதிக்காக பாடுபட்ட நபர்களை தேர்ந்தெடுத்து வழங்கப்படும் உலகின் உயரிய விருதுகளுள் ஒன்றான அமைதிக்கான நோபல் பரிசு நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் இன்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசானது வெனிசுலா நாட்டைச் சேர்ந்த பெண் போராளியான மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வெனிசுலா மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்கும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு ஒரு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 8 போர்களை நிறுத்தியதாக கூறி, அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு தர வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிப்படையாக வலியுறுத்தி வந்த நிலையில், பெண் போராளியான மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கியுள்ளது நோபல் கமிட்டி.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share