தலைமை நீதிபதியை நோக்கி செருப்பு வீசியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கவாய் நேற்று காலை வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் நீதிபதியை நோக்கி செருப்பு வீச முயன்றார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் 71 வயதான வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் கூறுகையில், ‘இப்படி செய்வதற்கு கடவுள் தான் என்னை தூண்டினார். செருப்பு வீசியதில் எனக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்லை. சரியானதைத்தான் செய்திருக்கிறேன்.
இதற்குப் பின் என்ன விளைவுகள் வரும்? எப்படி துன்புறுத்தப்படுவேன் என்றெல்லாம் எனக்குத் தெரியும்’ என்று தெரிவித்துள்ளார்.
இவர்,டெல்லி மயூர் விஹார் பகுதியைச் சேர்ந்தவர். உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன், ஷாதரா பார் அசோசியேஷன் மற்றும் டெல்லி பார் கவுன்சில் ஆகியவற்றில் உறுப்பினராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.