ADVERTISEMENT

ராமதாஸை சந்திக்க யாரும் வரவேண்டாம் : பாமக அறிவிப்பு!

Published On:

| By Kavi

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் வரும் 12ஆம் தேதி வரை ஓய்வில் இருப்பார் என்று பாமக தலைமை தெரிவித்துள்ளது.

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமதாஸுக்கு நேற்று முன்தினம் கார்டியோ ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. இந்நிலையில் முன்று நாள் மருத்துவமனையில் இருந்த ராமதாஸ் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ADVERTISEMENT

நேற்று சென்னையில் இருந்து தைலாபுரம் சென்றபோது செய்தியாளர்களிட்ம பேசிய ராமதாஸ், எனக்கு ஓய்வே கிடையாது. நன்றாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் பாமக இன்று (அக்டோபர் 8) வெளியிட்ட அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் மருத்துவ பரிசோதனை முடிந்து நேற்று (7.10.2025) மாலை மருத்துவமனையில் இருந்து ( டிஸ்சார்ஜ் ஆகி ) நலமுடன் வீடு திரும்பியுள்ளார். மருத்துவர்கள் ஓய்வெடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொண்டதின் பேரில், மருத்துவர்கள் அறிவுறுத்தல் படி 12.10.2025 வரை ஒய்வு எடுக்க உள்ளார்.

ADVERTISEMENT

எனவே அவருடைய பார்வையாளர் சந்திப்பு 12.10.2025 வரை ரத்து செய்யப்படுகிறது. மேலும் மருத்துவர் அய்யாவை சந்திக்க விரும்பும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பார்வையாளர்கள் வருகின்ற 13.10.2025 திங்கள்கிழமை முதல் வழக்கம் போல் தினமும் காலை 10 மணி முதல் 12 மணி வரை நேரடியாக சந்திக்கலாம். 12 மணிக்கு மேல் பார்வையாளர்கள் சந்திப்பு இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share