எங்க குடும்பத்துக்கு MLA, MP, மத்திய அமைச்சர் பதவி ஆசை இல்லை.. விஜய பிரபாகரன்

Published On:

| By Mathi

Vijayaprabhakaran

தங்களது குடும்பத்துக்கு MLA, MP மற்றும் மத்திய அமைச்சராக வேண்டும் என்ற ஆசை எதுவும் இல்லை என தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை பம்மலில் திருமண நிகழ்ச்சியில் விஜய பிரபாகரன் பேசியதாவது: நாம் எப்போதும் சத்திரியனாக மட்டும் இருப்பதை விட காலத்தின் தேவைக்கேற்ப சாணக்கியனாக மாற வேண்டும். இன்னும் கொஞ்சம் காலம் மட்டும் பொறுமையாக இருங்கள், விரைவில் ஒரு நல்ல அறிவிப்பு வெளியாகும்.

ADVERTISEMENT

கூட்டணி தொடர்பாக நல்ல முடிவை பிரேமலதா விஜயகாந்த் சொல்லுவாங்க. அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட்டு, எதற்காக இந்த கட்சியை ஆரம்பிச்சோமோ, அந்த இலக்கை அடைந்து, தேர்தல் முடிந்து கேப்டன் ஆசியோடு வெற்றியை நமதாக்குவோம்.

நானோ, எனது குடும்பத்தினரோ எம்.எல்.ஏ, எம்.பி அல்லது அமைச்சராக வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இல்லை. ஆனால் கட்சிக்காக உண்மையாக உழைத்த ஒவ்வொரு தொண்டனையும் சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பார்க்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். இவ்வாறு விஜய பிரபாகரன் கூறினார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share