திமுக கூட்டணியில் குழப்பம் இல்லை- ஸ்டாலினுக்கு தந்த வாக்குறுதியை காப்பாற்றுவேன்: வைகோ

Published On:

| By Minnambalam Desk

MDMK Vaiko

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு பக்கபலமாக என்றும் இருப்பேன் என கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவேன்; திமுக தலைமையிலான கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். Vaiko DMK Alliance

கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று ஜூன் 30-ந் தேதி வைகோ கூறியதாவது: மதிமுகவின் 7 மண்டல செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. திருப்பூரில் ஜூலை 1-ந் தேதி மண்டல செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறும்.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும். திமுக தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றும்; கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

கலைஞர் இருந்தவரை அவருக்கு பக்கபலமாக இருந்தேன்; அதேபோல முதல்வர் ஸ்டாலினுக்கும் பக்கபலமாக இருப்பேன் என வாக்குறுதி கொடுத்திருந்தேன். அதில் உறுதியாக இருக்கிறேன். திமுக கூட்டணியில் குழப்பமே இல்லை. இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share