ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் NIA அதிகாரிகள் திடீர் சோதனை- என்ன காரணம்?

Published On:

| By Mathi

Dindigul NIA Raid

திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA) அதிகாரிகள் இன்று ஆகஸ்ட் 20-ந் தேதி காலை முதல் 8 இடங்களில் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொடைக்கானலில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தினர். 2019-ல் பாபநாசம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அந்த சோதனை நடந்ததாக கூறப்பட்டது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து இன்று திண்டுக்கல், வத்தலகுண்டு, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் என மொத்தம் 8 இடங்களில் NIA அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் பேகம்பூர் ஜின்னா நகரில் SDPI கட்சியைச் சேர்ந்த மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா என்பவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

ஒட்டன்சத்திரத்தில் யூசுப் என்பவரது வீட்ட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். வத்தலகுண்டு மற்றும் கொடைக்கானலில் சில இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

பாபநாசம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெறலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் இந்த சோதனைகள் நடத்தப்படுவதாகவும் மற்றொரு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share