தென்மாவட்ட பயணிகளுக்கான புத்தாண்டு பரிசு! எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயண நேரம் குறைப்பு!

Published On:

| By Mathi

Train Time

தென் தமிழகத்தில் ரயில் பயணிகளின் நீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இயங்கும் மொத்தம் 65 எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு, பயண நேரம் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு முதல் இது அமலுக்கு வரும்.

ADVERTISEMENT

பயண நேரம் குறைக்கப்பட்ட ரயில் சேவைகள்

  • நாகர்கோவில்-தாம்பரம் எக்ஸ்பிரஸ்: 50 நிமிடங்கள் முன்னதாகவே சென்றடையும்.
  • கொல்லம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ்: 85 நிமிடங்கள் விரைவாக செல்லும்
  • கோவை-ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ்: 55 நிமிடங்கள் விரைவாகச் சென்று சேரும்.
  • கடலூர் துறைமுகம்-மைசூரு எக்ஸ்பிரஸ்: 50 நிமிடங்கள் விரைவாகச் சென்று சேரும்.
  • ராமேஸ்வரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் (வாரத்திற்கு மூன்று முறை): 25 நிமிடங்கள் பயண நேரத்தைக் குறைக்கும்.
  • தூத்துக்குடி-சென்னை எழும்பூர் முத்துநகர் எக்ஸ்பிரஸ்: புறப்படும் பயணத்தில் 30 நிமிடங்களும், திரும்பி வரும் பயணத்தில் 15 நிமிடங்களும் பயண நேரத்தைக் குறைக்கும்.
  • செங்கோட்டை-சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர்-மங்களூரு எக்ஸ்பிரஸ், மற்றும் சென்னை எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ்: தலா 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
  • அகமதாபாத்-சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை-திருப்பதி எக்ஸ்பிரஸ்: தலா 15 நிமிடங்கள் பயண நேரத்தை குறைக்கும்
  • எக்ஸ்பிரஸ் ரயில்களைத் தவிர, 14 பயணிகள் ரயில்களின் பயண நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. இதில் திருநெல்வேலி-செங்கோட்டை பயணிகள் ரயில் சேவை 35 நிமிடங்கள் முன்னதாகச் சென்றடையும். மதுரை-போடிநாயக்கனூர் சேவை 20 நிமிடங்கள் குறைவாகவும், மதுரை-ராமேஸ்வரம் சேவை 15 நிமிடங்கள் குறைவாகவும் பயண நேரத்தைக் கொண்டிருக்கும்.

எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள்

ADVERTISEMENT
ரயில் சேவைபயண நேரம் குறைப்பு
நாகர்கோவில் – தாம்பரம் எக்ஸ்பிரஸ்50 நிமிடங்கள்
கொல்லம் – தாம்பரம் எக்ஸ்பிரஸ்85 நிமிடங்கள்
கோவை – ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ்55 நிமிடங்கள்
கடலூர் துறைமுகம் – மைசூரு எக்ஸ்பிரஸ்50 நிமிடங்கள்
ராமேஸ்வரம் – திருப்பதி எக்ஸ்பிரஸ் (வாரத்திற்கு 3 முறை)25 நிமிடங்கள்
தூத்துக்குடி – சென்னை எழும்பூர் முத்துநகர் எக்ஸ்பிரஸ் (புறப்படும் பயணம்)30 நிமிடங்கள்
தூத்துக்குடி – சென்னை எழும்பூர் முத்துநகர் எக்ஸ்பிரஸ் (திரும்பும் பயணம்)15 நிமிடங்கள்
செங்கோட்டை – சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ்20 நிமிடங்கள்
சென்னை எழும்பூர் – மங்களூரு எக்ஸ்பிரஸ்20 நிமிடங்கள்
சென்னை எழும்பூர் – குருவாயூர் எக்ஸ்பிரஸ்20 நிமிடங்கள்
அகமதாபாத் – சென்னை எக்ஸ்பிரஸ்15 நிமிடங்கள்
சென்னை – திருப்பதி எக்ஸ்பிரஸ்15 நிமிடங்கள்

பயணிகள் ரயில்கள்

ரயில் சேவைபயண நேரம் குறைப்பு
திருநெல்வேலி – செங்கோட்டை35 நிமிடங்கள்
மதுரை – போடிநாயக்கனூர்20 நிமிடங்கள்
மதுரை – ராமேஸ்வரம்15 நிமிடங்கள்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share